சபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

Home

shadow

                    கர்நாடக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம்
கூறிவிட்டது.

கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்துவந்த காங்கிரஸ்மற்றும், மதச்சார்பற்ற ஜனதா தள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவிவிலகினார்கள். அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் ரமேஷ்குமார் தாமதம் செய்வதாகவும், அவர் உடனே முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் பதவி விலகிய எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உடனடியாக தகுந்த முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :