சமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்

Home

shadow

               சமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் உள்ளது என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார்
உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அட்சி நடைப்பெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் நில மோசடி தலைவிரித்தாடியது ஆகவே இது பற்றிய புகார்களை,  ராம்பூர் மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கினர். இந்நிலையில், இணையதளத்தில் அரசு வெளியிட்ட நில மோசடி குற்றவாளிகள் பட்டியலில் சமாஜ்வாதி எம்.பி அசம்கான் பெயர் இடம்பெற்றது. இதனை கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் நடைப்பெற்ற சட்டசபை கூட்டத்தில் சமாஜ்வாதி எம்.பி அசம்கான் பிரச்சனை எதிர் ஒலித்தது. அப்போழுது அவையில் எதிர்க்கட்சித் தலைவர், அகமது ஹசன், ''சமாஜ்வாதி, எம்.பி மீது, பொய் வழக்கு போடப்பட்டுள்ளது,'' என்றார். அதற்கு முதல்வர் ஆதித்யநாத், சமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் உள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, உ.பி., சட்டசபையில், சமாஜ்வாதி கட்சி, எம்.எல்.ஏக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டசபை நேற்று  ஒத்தி வைக்கப்பட்டது. 

இது தொடர்பான செய்திகள் :