சரக்கு, சேவை வரி 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 1 சதவீதமாகவும் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

Home

shadow

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுவதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைப்பெற்ற 34-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அதில் ஏப்ரல் 1 ஆம்  தேதிக்கு முன்னர் பதிவு செய்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்தமட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 1 சதவீத வரி அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கலாம். வீட்டின் விலை 45 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு அவை ஏப்ரல் 1 ஆம் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :