சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து 14 ஆயிரத்து 926 பேர் உயிரிழப்பு

Home

shadow

  

        சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, எல்லையில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் சாலை விபத்துகள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, சாலை விபத்துகளால் 2013- முதல் 2017- ஆம் ஆண்டு வரை 14 ஆயிரத்து  926 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது. மேலும், இது போன்ற விபத்துகளை ஏற்க முடியாது என கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலைகள் பராமரிப்பில் கவலையில்லாமல் இருப்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்தது. எல்லையில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பான செய்திகள் :