சி.ஆர்.பி.எப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்களை சுட்டுக் கொன்று விட்டு, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

Home

shadow

                ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்களை சுட்டுக் கொன்று விட்டு, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் தன்னத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம்  உதாம்பூர் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் வீரர்கள்  முகாமில், நேற்றிரவு வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவெடுத்ததில், அஜித்குமார் என்ற வீரர், சக வீரர்கள் மூன்று பேரை சரமாரியாக சுட்டதில்போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :