சீனா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சூழலை ராணுவம் சிறப்பாக கையாள்கிறது - ராணுவ தளபதி பிபின் ராவத்

Home

shadow

                      சீனா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சூழலை ராணுவம் சிறப்பாக கையாள்கிறது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை இன்னும் மேம்பட வைக்க வேண்டியது அவசியம் எனவும், ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த உதவும் பணியை மட்டுமே தாங்கள் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சூழலை தாங்கள் சிறப்பாக கையாண்டு வருவதாகவும், சீனா, பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். காஷ்மீர்  மக்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுவதாகவும், நல்ல கட்டுப்பாட்டின் கீழ் காஷ்மீர் நிலைமை கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தியாவின் விருப்பப்படிதான் ஜம்மு காஷ்மீரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைதிப் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்றும் பிபின் ராவத் கூறியுள்ளார்

இது தொடர்பான செய்திகள் :