சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து - 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Home

shadow

                  குஜராத் மாநிலம் சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, கட்டட உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

                 சூரத் நகரில் செயல்பட்டு வந்த தனியார் டுட்டோரியல் மற்றும் வரைகலை பயிற்சி மையத்தில் நேற்று பகலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, பயிற்சி மையத்திலிருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தீயில் கருகியும், மூச்சுத் திணறலாலும் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். 

                மேலும் உயிர் தப்பிப்பதற்காக 4-வது மாடியில் இருந்து மாணவர்கள் குதித்த காட்சிகளும் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், 18 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணி நேரம் போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து, கட்டிட உரிமையாளர்கள் ஹர்சல் வெகாரியா, ஜிக்னேஷ் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் பார்கவ் புதானி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

                  இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :