ஜனநாயகத்தைப் பாதுகாக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்

Home

shadow

ஜனநாயகத்தைப் பாதுகாக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

டெல்லியில்  எதிர்க்கட்சிகள் சார்பில் "ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பெயரிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ககெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உலகில் 18 நாடுகள் மட்டுமே தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையைப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும் அதில் முறைகேடுகள் மேற்கொள்ளலாம் என்பது நிரூபிக்கப்பட்டதால், தற்போது அந்த நாடுகள் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை "ஹேக்' செய்யலாம் என்பதும், அந்த இயந்திரத்தின் மென்பொருளை மாற்றியெழுதலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய அனைத்துத் தலைவர்களும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்

இது தொடர்பான செய்திகள் :