ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி

Home

shadow


தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த  அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஸ்ரீநகர் மத்திய சிறையில் பாகிஸ்தான் கொடி கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், அதிக பாதுகாப்பு மிக்கதாக கருதப்படும் இந்த சிறைக்குள், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மற்றும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 25 செல்போன்கள், சிம் கார்டுகள், ஐபாட்கள், பாகிஸ்தான் கொடி மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதிக பாதுகாப்பு உள்ள சிறைச்சாலைக்குள் பாகிஸ்தான் கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது நவீத் ஜாட், கடந்த மாதம் 6-ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தப்பிச் சென்றார். இதற்கான திட்டம் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலையில் தீட்டப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு படையினர் சிறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :