ஜம்மு சிறுமி வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Home

shadow

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜம்மு காஷமீர் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி மாயமானார். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர்  அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.

 மருத்துவமனை பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறிக்கை தெரியவந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார்.

 திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.

 இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,

சஞ்சய் ராம், தீபக் ஹாஜூரியா,பர்வேஷ் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக மற்ற 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் சிறுவன் என்பதால், அவன் விடுவிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :