ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப்.பயிற்சி முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1 வீரர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Home

shadow

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திப்புராவை அடுத்த லெத்போராவில்  சி.ஆர்.பி.எப். பயிற்சி மையம் உள்ளது. இன்று அதிகாலை 2 மணி அளவில் பயிற்சி மையத்திற்குள் புகுந்த 3 பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்புப்படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து விரைந்த கூடுதல் படையினர்,. பயிற்சி மையத்திற்குள் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஜெய்ஸ் முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :