ஜல் ஜீவன் திட்டத்திற்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - பிரதமர் மோடி

Home

shadow

            வீடுகளுக்கே தண்ணீர் கொண்டு வந்து அளிக்கும் ஜல் ஜீவன் திட்டத்திற்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 6-வது முறையாக தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அவர், கடந்த 5 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளதாகவும், கடந்த கால அரசுகள் ஏழைகள் குறித்து கவலைக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஏழைகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை இருந்ததாகவும், தண்ணீர் பிரச்னையை தீர்க்க, வீடுகளுக்கே தண்ணீர் கொண்டு செல்லும் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தபடும் எனவும் தெரிவித்தார். மூன்றரை லட்சம் கோடிக்கு அதிகமான பணம் தண்ணீருக்காக செலவிடப்படும் எனவும், விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  நீர் ஆதாரங்களை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்க, நீரின்றி அமையாது உலகு எனும் திருவள்ளூவரின் வாக்கையும், பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். தண்ணீர் பிரச்னை குறித்து யாரும் சிந்திக்காத காலத்தில், திருவள்ளூவர் அதனை குறித்து பேசியதாகவும்  தூய பாரதம் போன்று தண்ணீருக்காகவும் இயக்கம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.  மக்கள் தொகை பெருய்க்க்கம் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும், குழந்தை பிறக்கும் முன்னரே அதன் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும், எந்த ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் குறித்து சிந்திக்காமல் இருக்க கூடாடு என்றும் கூறினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 1450 பழைய சட்டங்கள் ரத்து செய்ய்யப்பட்டு மக்கள் மீதான சுமை குறைக்கப்ப்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்காக எளிமையான முறைகள் நடைமுறைக்கு கொண்டு வரபட்டுள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :