ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

Home

shadow

         ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

          விமான சேவையை மீண்டும் தொடங்க கோரி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் உள்ள உள்நாட்டு விமான அமைச்சகத்தின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

          கடும் நிதி நெருக்கடியால் கடந்த மாதம் 17ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது. இதன் காரணமாக சுமார் 16 ஆயிரம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் வேலை இழந்தனர். இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க கோரியும், விமான சேவையை மீண்டும் தொடங்க கோரியும் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

           இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் உள் நாட்டு விமான அமைச்சகத்தை ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் முற்றுகையிட்டனர், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :