டெல்லி – ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்வு

Home

shadow


         ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறி உள்ளார்.

டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, வெட் கிரைண்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார். இந்த கூட்டத்துக்கு பின்னர் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான  வரம்பு ஒன்றரை கோடி ரூயாக அதிகரிக்கப்படுவதாகவும், இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதால் இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது எனவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :