டெல்லி - பிரதமர் மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்

Home

shadow


 

        பிரதமர் மோடியைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்.


கொல்கத்தா:

 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட் பண்ட்ஸ் மோசடி தொடர்பான விசாரணையில் சிபிஐ அமைப்புக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  கொல்கத்தாவில் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். இதற்கிடையே, சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆவேசமாகி உள்ள மம்தா பானர்ஜி  டெல்லியில் நாளை தர்ணா போராட்டத்தை தொடங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

இது தொடர்பான செய்திகள் :