டெல்லி - விமான பணிப்பெண் கைது

Home

shadow

மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களைக் கடத்திய ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

                  டெல்லியிலிருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் அமெரிக்க டாலர்களை கடத்தியதாக விமானப் பணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்ன. இது குறித்து வருவாய்த்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், கைது  செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதும் டெல்லியில் உள்ள மல்ஹோத்ரா என்ற ஹவாலா தரகருக்காக அமெரிக்க டாலர்களை கடத்தியதும் தெரிய வந்துள்ளது.

          மேலும் மல்ஹோத்ரா, டெல்லியிலுள்ள நகை வியாபாரிகளிடம் வெளிநாட்டு கரன்ஸிகளை பெற்று விமானப் பணிப்பெண்கள் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு கடத்தி வருவதும் வெளிநாடுகளில் உள்ள தரகர்கள் மூலமாக அந்த பணத்தை தங்கமாக மாற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மல்ஹோத்ராவை கைது செய்துள்ள வருவாய்த்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மேலும் சில விமானப் பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :