டெல்லியில் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Home

shadow


எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, தொடர்ந்து 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்காக, மார்ச் 5-ஆம் தேதி, நாடாளுமன்றம் கூடியது. ஆனால்,கடந்த வாரம் முழுவதும், சபை கூடுவதும், ஒத்தி வைப்பதுமாக காட்சிகள் அரங்கேறின. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பிரச்னைக்காக, காங்கிரஸும், திரிணாமூல் கட்சியும் இணைந்துஅமளியில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர எம்.பி.,க்களும், காவிரி பிரச்னைக்காக தமிழக எம்.பி.,க்களும், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 -ஆவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை துவங்கியதும், தெலுங்கு தேச எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.,க்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வேதனைப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :