டெல்லியில் சோனியா காந்தி விருந்து

Home

shadow


பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார்.

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் பொருட்டு விருந்து ஒன்றுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று விருந்து நடைபெற உள்ளது. திமுகவின் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, திரிணாமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாபீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :