டெல்லியில் இந்தியாவுக்கு முதலிடம்

Home

shadow


ஆயுத இறக்குமதியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நான்காவது சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட இந்தியா, தனது ஆயுத தேவையில் 65 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. குறிப்பாக இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 62 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ஆயுத இறக்குமதியின் அளவு 12 சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :