டெல்லியில் சூறாவளிப் புழுதிப்புயல்

Home

shadow

டெல்லியில் நேற்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடும் சூறாவளிப் புழுதிப்புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர் 18 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாத த் துக்கும் மேலாக வட மாநிலங்களில் வீசி வரும் கடுமையான புழுதி சூறாவளிப் புயலில் சிக்கி உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல், பஞ்சாப், ஹரியான, சண்டிகர், பீகார்டெல்லி மற்றும் தெலங்கானவின் தெற்கு கடற்கறைப்பகுதிகளில் கடுமையான புழுதி சூறாவளி வீசிவருகிறது. இந்நிலையில் டெல்லியில், நேற்று வீசிய கடுமையான புழுதி சூறாவளி புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த்து. இதில் மரம் விழுந்தும் தகடு விழுந்தும்  2 பெண்கள் உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 க்கும் மேற்பட்ட மரங்கள், வேறொடு சாய்ந்து, வாகனங்கள் மீது விழுந்ததால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அப்பளம் போல் நொருங்கியது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பும், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான புழுதிப்புயல் வீசும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :