டெல்லியில் முன்னாள் முதல்வருக்கு சம்மன்

Home

shadow


பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் நாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் ஜீலியாங்கிற்கு தேசிய புலனாய்வு துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஜீலியாங் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நாகாலாந்தில் செயல்பட்டு வரும் என்.எஸ்.சி.என். எனும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு துறை, நாகலாந்து அரசு அதிகாரிகள் சிலரை கைது செய்தது. அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின்பேரில்ஜீலியாங் உத்தரவின் பேரிலேயே பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி ஜீலியாங்கிற்கு தேசிய புலனாய்வு துறை சம்மன் அனுப்பி உள்ளது

இது தொடர்பான செய்திகள் :