தஞ்சை - குடிநீர் வழங்க கோரிக்கை

Home

shadow


தஞ்சாவூர் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையாலும் காவிரியில் தண்ணீர் வராததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே செங்கமலநாச்சியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் பல மாதங்களாக சீராக தண்ணீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்  குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தஞ்சை மாநகராட்சி குடிநீர் வாகனம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :