தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமி -காப்பாற்றிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்

Home

shadow

          தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமி -காப்பாற்றிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்

          காஷ்மீரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுமியை, சி.ஆர்.பி.எப். வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பிரம்மபுத்திரா மற்றும் அதன் ஒன்பது கிளை ஆறுகளில், வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது.

இந்த நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஆற்றில், படிக்கட்டில் நீராடிக் கொண்டிருந்தார்.

அப்போது, தவறி விழுந்த சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் விரைந்து சென்று சிறுமியை காப்பாற்றினர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலர், சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப். வீரர்களை பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :