தனியார் சொகுசுப் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து

Home

shadow


உத்தரப்பிரதே மாநிலம் மெயின்புரியில் தனியார் சொகுசுப் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பஃருக்காபாத்திற்கு தனியார் சுற்றுலாப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் உத்தரப்பிரதேசத்தின் கிராத்பூர் கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலைத் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்றும் பேருந்தின் கூரையிலும் பயணிகள் ஏற்றப்பட்டிருந்தது, அதிக உயிரிழப்புக்கு காரணம் என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :