தமிழக பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடியில் தமிழிசை செளந்திரராஜன், சிவகங்கையில் எச். ராஜா போட்டி

Home

shadow

மக்களவைத் தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சுயின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மே19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேர்தல் குழு  செயலாளருமான ஜே.பி.நட்டா   முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் மொத்தம் 184 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும், பாரதிய ஜனதா கட்சியின்  தேசியத் தலைவர் அமித் ஷா முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி, மகாராஷ்டிரத்தின் நாகபுரி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு அருணாசலப் பிரதேசம் கிழக்கு தொகுதியிலும், வி.கே. சிங், காஜியாபாதிலும், மகேஷ் சர்மா, கெளதம புத்தா நகர் (நொய்டா) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் மேலும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், கேரளம், மணிப்பூர், ஒடிஸா, ராஜஸ்தான்சிக்கிம், தெலங்கானா, உத்தரகண்ட், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் போட்டியிடும்  வேட்பாளர்களின் முதல்கட்டப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.      

இது தொடர்பான செய்திகள் :