தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி - காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு

Home

shadow

      தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி - காங்கிரஸ்  காரிய கமிட்டி ஏற்க மறுப்பு 

         நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

        நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர்த்து பிற இடங்களில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியது. மொத்தம் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. மேலும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

    காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன் வந்தாகவும் ஆனால் அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க காரியக் கமிட்டி மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பான செய்திகள் :