தாஜ்மஹாலில்  புதிய கட்டுப்பாடுகள்.

Home

shadow

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை முறையாக பரமாரிப்பது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. தொல்லியல் துறை, காவல்துறை மற்றும் துணைநிலை ராணுவ உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதில், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் தாஜ்மஹாலுக்குள் நாள்தோறும் 40 ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு  செய்யப்பட்டது.

 

அதே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உச்சவரம்பு இல்லை என்றும், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. உயர்நிலைக் குழுவின் பரிந்துரை முடிவுகள் குறித்து ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று  மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :