திசை மாறிய வாயு புயல் - தப்பிய குஜராத்

Home

shadow

          திசை மாறிய வாயு புயல் - தப்பிய குஜராத் 

         வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்க உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

       அரபிக்கடலில் உருவான வாயு புயல், நேற்று அதி தீவிர புயலாக மாறியது. குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்தது.ஆனால், தற்போது புயல் திசை மாறியுள்ளதால் குஜராத் மாநிலத்தை புயல் தாக்காது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையோர  பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். எனவே, அங்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.  புயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

         புயல் நெருங்கி வருவதை அடுத்து குஜராத் மாநிலத்தில் கட்ச், மோர்பி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு 700 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன

இது தொடர்பான செய்திகள் :