திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் - மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Home

shadow

                     திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பதி ஏழுமலையான் கோயில் எனப்படும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில், வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளான இன்று காலையில், உற்சவர் மலையப்ப சுவாமி, குழலூதும் கண்ணன் அவதார திருக்கோலத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி, கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சவரின் ஊர்வலம் நடைபெற்றது


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :