தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Home

shadow

 

                பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத்தில் இந்தியா ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

பிரதமராக 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற மோடி அதே ஆண்டு தீபாவளியன்று காஷ்மீரின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் சென்று அங்கு ஜவான்களுடன் தீபாவளி கொண்டாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பின்னர் 2015-ஆம்ஆண்டு பஞ்சாப் எல்லையில் ஜவான்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2016-ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் இந்தோ- திபெத் வீரரர்களுடனும், 2017-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் குரூஸ் பகுதியிலும் தீபாவளியை கொண்டாடினார். இந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளியைக் கொண்டாட உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு ஹார்சில் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டினார். இதையடுத்து, ராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி, எல்லைப் பகுதியில் பனிபடர்ந்த மலைகளுக்கிடையே நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் ராணுவத்தினரின் தியாகம் போற்றத்தக்கது எனவும், அவர்களாலேயே 125 கோடி இந்தியர்களின் பாதுகாப்பும், கனவுகளும் சாத்தியமாகிறது எனவும் புகழாரம் சூட்டினார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :