தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் 2 பி.எஸ்.எப்.வீரர்கள் உயிரிழப்பு

Home

shadow

  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதலில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப்படை வீர்ர்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் மர்பேடா என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்து சந்தோஷ் லக்ஷ்மண், விஜய்நந் நாயக் என்ற  2 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணிக்குச் சென்றனர். தத்பாலி என்ற கிராமம் அருகே சென்ற போது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :