தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் எந்த கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை

Home

shadow

 

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் எந்த கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 119 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 107 தொகுதிகளிலும், காங்கிரஸ் 95 இடங்களிலும் , பாரதிய ஜனதா கூட்டணி 66 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்திருந்தது. ஆனால் வேட்பாளர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் இதுவரை எந்த கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது தெலங்கானா வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :