தெலுங்கானா கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்

Home

shadow

                                           தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்திலுள்ள கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில்  ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள கோதாட கிராமம் அருகே தம்பபள்ளி கோவிலில் நேற்று ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  இதில் பங்கேற்று விட்டு 10க்கும் மேற்பட்டோர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது ஆட்டோ எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சூர்யா பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :