தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

Home

shadow

தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது  பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார், அரசு நலத் திட்ட  மானியங்களைப் பெற ஆதார் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனடிப்படையில்,  தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார்  அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால்,  ஆதார் அட்டை இல்லாத  ஊட்டச்சத்து சாப்பிடும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் வீரேந்திர குமார் தெரிவித்தார். அதுவரை பிற அடையாள அட்டைகளை காட்டி குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் அளிக்கப்பட்டுவரும் சேவைகளை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :