தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம்

Home

shadow

மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது குறித்து டெல்லியில் இன்று நடைபெறும், இந்திய மருத்துவ கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேர்வு தலைவர் ராஜா, மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா மக்கள் விரோத மசோதா என்றும், இதனால் மருத்துவ பணி மற்றும் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்றார். அலோபதி அல்லாத பிற மருத்துவ பிரிவுகளை சேர்ந்தவர்களும், 6 மாத பயிற்சியின் மூலம் அலோபதி சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது மருத்துவ சிகிச்சை முறையில் பேராபத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த செயல், போலி மருத்துவர்களுக்கு அரசே அங்கீகாரம் அளிப்பது போன்று இருப்பதாக கூறினார். டெல்லியில் இன்று நடைபெறும் இந்திய மருத்துவ கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதேபோன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய மருத்துவ கவுன்சில் தமிழக தலைவர் ஜெயலால், இந்தியாவில் ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, சர்வாதிகாரமான, தேசிய மருத்துவ கவுன்சிலை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்தார்மத்திய அரசு இந்த புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பான செய்திகள் :