தேர்தலில் போட்டி இல்லை

Home

shadow


அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துளளார்.

மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவ,ர் கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் அதனால்தான், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.  சட்டப்பேரவையில் முறைகேடு நடைபெறுவதாக முதலமைச்சர் குமாரசாமி கருத்துத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட சித்தராமையா, தான் ஆட்சி பொறுப்பில் இருந்த போது அங்கு ஊழல் நடைபெறவில்லை என்றும் ஒருவேளை தற்போது ஊழல் நடைபெற்றால், முதல்வர் குமாரசாமி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இனி அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டாலும்அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம்  என முடிவு செய்து இருப்பதாகவும் சித்தராமையா தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :