தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்றத் தகவல்களை விளம்பர படுத்த வேண்டும்

Home

shadow

தேர்தலில் போட்டியிடும வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்றத் தகவல்களை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில் மக்கள் அறியும்படி விளம்பரம் செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. இதே தகவலை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவம் 26-ல் வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும் என்றும் தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளங்களில் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவைச் செயல்படுத்தாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.இந்த உத்தரவு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :