தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் குற்றங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம்

Home

shadow

                     தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை செய்திதாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


குற்றச் சாட்டு பதிவுகளுக்கு ஆளான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பிண்ணனி குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டும் எனவும், இது தொடர்பான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கவனித்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது


இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க தனது துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது


இந்நிலையில், ர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணியை மக்களுக்கு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


தேர்தல் நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது வேட்பாளர்கள் தங்கள் குற்ற பின்னணி குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :