தேர்தலில் வாக்களிப்பதை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Home

shadow

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி  டுவிட்டரில் வெளியிட்டள்ள பதிவுகளில் வரும் மக்களவைத் தேர்தலில், அதிக அளவிலான மக்கள் வாக்களிக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அதிக அளவிலான மக்கள் வாக்களித்தால், அது வலிமையான ஜனநாயக அரசை உருவாக்கும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதே போல் திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து விருதுகளை பெறும் நடிகர், நடிகைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரபல நடிகர்களை அவர் கேட்டுகொண்டார். தேர்தலில் வாக்களிப்பது மக்களின் தலையாய கடமை என கூறிய பிரதமர் மோடி,   நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்களிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய வைப்பது வாக்குரிமை என கூறினார்.  மேலும் தனது பதிவில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்ப்பதற்கான இணையதள தகவல்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான செய்திகள் :