தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய்யான பிரசாரத் திட்டத்தை கையிலெடுத்துள்ளது - அருண் ஜேட்லி

Home

shadow

                 தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய்யான பிரசாரத் திட்டத்தை கையிலெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.


 அமெரிக்காவில் சிகிச்சை முடித்து நாடு திரும்பியுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், நமது நாட்டின் முக்கிய அமைப்புகளான நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சிபிஐ ஆகியவற்றைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி அவற்றைச் சிதைக்கும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் இதுபோன்ற தேசத்துக்கு எதிராக செயல்படுபவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் நாம் இப்போது உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த இரு மாதங்களாக காங்கிரஸ் கட்சி மிகத்தீவிரமான பொய் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் எந்த அளவுக்கு மோசமான, தவறான, அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளை கூற முடியுமோ அந்த அளவுக்கு காங்கிரஸ் கூறி வருவதாக குற்றச்சாட்டினார்உலகிலேயே மிகச்சிறப்பான ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் இதனை பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பாராட்டி வருகின்றன என்றும் கூறினார். இந்த நிலையில் நமது நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது எனவும் இதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்ளமுடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :