தோட்டாக்களை விட வாக்குகள் அதிக சக்தியுடையவை - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

Home

shadow

                                   தோட்டாக்களை விட வாக்குகள் அதிக சக்தியுடையவை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


 டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு,  மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில், சில தன்னார்வலர்கள் முரண்பாடான நிலையை கடைப்பிடிக்கின்றனர் என்றும் வன்முறை குழுக்களால் மனித உரிமை மீறல்கள் மீறப்படும்போது, தன்னார்வலர்கள் அதை ஆதரிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், அந்த சம்பவத்தின்மீது சட்ட அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுக்கையில், அதற்கு தன்னார்வலர்கள் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய அவர் அரசு நிர்வாகத்தில் ஜனநாயக ஆட்சிதான் சிறந்ததாகும் என கூறினார்.. தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை நாம் மாற்றுகிறோம் எனவும் தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு அளிப்பதுதான், ஜனநாயகத்தின் அடிப்படை எனவும் தெரிவித்தார். துப்பாக்கிகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் யோசனையை பின்பற்ற முடியாது என்றும் இத்தகைய நபர்களை ஆதரித்து பேசுவதை சிலர் தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும் விமர்சித்தார்

இது தொடர்பான செய்திகள் :