நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு பெட்டிகள்

Home

shadow

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்பார்த்தபடியே வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ், வெறும் ஒரு லட்சத்து 95,000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரஸ்-ன் பாரம்பரியமிக்க அமேதியில், கடந்த முறை தன்னிடம் தோற்ற, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தற்போது அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமேதி தோல்வியை ஈடுசெய்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷாபாஜக தலைவர் அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.ஜே.சவ்தா, சுமார் 3 லட்சத்து 37,000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

முன்னாள் சபாநாயகர் மீராகுமார் 

பீகாரில் சசாராம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தோல்வி கண்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சேதி பஸ்வான், 4 லட்சத்து 94,000 அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தும்கூரு தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பஸவராஜ், சுமார் 14,000 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றிபெற்றார்.

எல்ஜேடி தலைவர் சரத் யாதவ்

மூத்த எம்பி-யான எல்ஜேடி தலைவர் சரத் யாதவ், மாதேபுரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரிடம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

மெஹபூபா முப்தி

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, அனந்த்நாக் தொகுதியில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சாத்வி பிரக்யா சிங் தாகூர்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாஜக-வின் சாத்வி பிரக்யா சிங் தாகூரிடம், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தோல்வி கண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 

பாஜக சார்பில் களம் கண்ட நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் தோல்வி கண்டுள்ளார். தெலங்கானாவில் முதல்வரின் மகளும், எம்.பி.,யுமான கவிதா கல்வகுன்ட்லா, நிஜாமாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அரவிந்திடம் தோற்றார்.

இதேபோல், கர்நாடகாவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிர்ச்சி தோல்வியடைந்தார். மேலும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.பி.யாதவிடம் சுமார் ஒரு லட்சத்து 20, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியுற்றார்.

அகிலேஷ் யாதவ் 

சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் அகிலேஷின் மனைவியும், எம்.பி,யுமான டிம்பிள் யாதவ், கன்னோஜ் தொகுதியில், தோல்வியடைந்தார்.

நடிகை ஜெயப்பிரதா

பாஜக சார்பில் ராம்பூரில் போட்டியிட்ட அத்தொகுதி முன்னாள் எம்.பி.யான நடிகை ஜெயப்பிரதா, சமாஜ்வாதி நட்சத்திர வேட்பாளர் ஆசம் கானிடம் தோற்றார். டெல்லி முன்னாள் முதல்வர், ஷீலா தீட்சித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் தோல்வியடைந்தார்.

கவுதம் கம்பீர் 

கிழக்கு டெல்லியில் பாஜக தரப்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி பெற்ற நிலையில், குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான விஜேந்தர் சிங், தெற்கு டெல்லி தொகுதியில் தோல்வியுற்றார்.

வருண் காந்தி

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்ட வருண் காந்தி வெற்றி பெற்றார். பதேபுர் சிக்ரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல நடிகருமான ராஜ்பப்பர் தோல்வியடைந்துள்ளார். இதுபோல் பீகாரில் பேகுசராய் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கண்ணையா குமார் தோல்வி கண்டுள்ளார்.

சத்ருகன் சின்ஹா

காங்கிரஸ் சார்பில் பாட்னா சாஹிப் தொகுதியில் களம் கண்ட நடிகரும் எம்பியுமான சத்ருகன் சின்ஹா மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் தோற்றார். சத்ருகனின் மனைவி பூனம் சின்ஹா, லக்னோவில் அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

நடிகை ஊர்மிளா மட்டோன்கர்

வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான நடிகை ஊர்மிளா மட்டோன்கர் தோல்வியடைந்தார். மறைந்த பிரமோத் மகாஜன் மகளிடம், நடிகர் சுனில் தத்தின் மகள் பிரியா தத் தோல்வியடைந்துள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :