நரேந்திர மோடி : அமெரிக்க டைம்ஸ் புகழாரம்

Home

shadow

                                                                                                        வளர்ச்சி திட்டங்களை தீட்டி, சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்தும் ஒரே  மனிதர் இந்தியாவில் நரேந்திர மோடி மட்டுமே என பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் பாராட்டியுள்ளது.    உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பத்திரிக்கையான டைம்ஸ் தனது நடப்பு பருவ இதழில் இரு தலைப்புகளில் பாரத பிரதமர் மோடி குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.
 அதில், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றம், இறக்கம் இரண்டையும் சந்தித்துள்ளது என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.  இந்தியாவில் அதிக சீர்திருத்தங்கள் தேவை, அதை மோடியால்தான் ஏற்படுத்த முடியும், சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் உறவில் மோடி மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று பத்திரிகை கூறியுள்ளது. 
2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிவசூல் ஆனது என்றும், ஆதார் திட்டத்தை அனைத்திலும் செயல்படுத்தியது மிகப்பெரிய சீர்திருத்தம் என்றும் டைம்ஸ் கூறியுள்ளது. இந்தியாவுக்கு தற்போது தேவையான சீர்திருத்தத்தை மோடியால் மட்டுமே வழங்க முடியும் என்று டைம்ஸ் பத்திரிகை புகாழரம் சூட்டியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :