நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது முழு நேர பணி அல்ல

Home

shadow

நாடாளுமன்ற  உறுப்பினர் பொறுப்பு என்பது முழு நேர பணி அல்ல என  மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர்களாகப் பணிபுரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் அஷ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்குரைஞர்கள் பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரிவது பார் கவுன்சில் விதிகளின் படி தடை செய்யப்பட்டிருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் இந்திய அரசின் கீழ் பணிபுரிபவர்கள் எனவும் அஷ்வினி குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் கே.கே.  வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்தெடுக்கப்படுபவர்கள் என்றும், எம்.பி. பொறுப்பு முழு நேரப் பணி அல்ல எனவும் தெரிவித்தார். அதே நேரம், அமைச்சர் பொறுப்பு என்பது முழு நேரப் பணி என்றும் அவர் கூறினார். மேலும் வழக்குரைஞர்களாக உள்ள எம்.பிக்கள் நாட்டிற்கு பல நல்ல விஷயங்கள் செய்து இருப்பதாகவும், எனவே அவர்கள் வழக்குரைஞர்களாக பணிபுரிய தடை விதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :