நாடாளுமன்ற அவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பாராட்டு

Home

shadow

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளால் பல்வேறு காரணங்களை முன்னிட்டு முடக்கப்பட்டு வந்த நாடாளுமன்றம், இன்று காலையிலிருந்து சுமுகமாக நடைபெறுவதையொட்டி அவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தூதரக அதிகாரிகளை சில நாட்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து கேள்வியெழுப்பினார். குஜராத் தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு, பிரதமர் மோடி அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சி ஒரு வார காலத்துக்கும் மேலாக அவையை முடக்கி வந்தது. பின்னர் பிரதமரின் தேர்தல் பிரசார உரை குறித்து, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் கூறியதையடுத்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவை சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கினார்.. அதற்கு அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டதையடுத்து அவை மீண்டும் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முத்தலாக் சட்ட மசோதா அவையில் தாக்கலானது. அதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் அதிகமாக ஏற்பட்டது. இருந்த போதிலும் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையி்ல் இன்று காலை அவை கூடியதிலிருந்து எவ்வித கூச்சல் குழப்பமும் எதுவும் இன்றி, அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெற்றன. அதையடுத்து அமைதிகாத்து வரும் அவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவகும் மாநிலங்களவை வெங்கையா நாயுடு பாராட்டுகளை தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :