நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின- தமிழகத்தில் 48.57 % சதவிகிதம் பேர் தேர்ச்சி

Home

shadow

             நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழகத்தில் 48.57 % சதவிகிதம் பேர் தேர்ச்சி

             தமிழக மாணவி ஸ்ருதி தேசிய அளவில் 10ஆவது இடம்

 

              நாடுமுழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் 5ஆம் தேதியும் ஒடிசா மாநிலத்தில் 20ஆம் தேதியும் நீட் தேர்வுகள் நடைபெற்றன.

 

             இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 56.50 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

             நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் நீட் எழுதியவர்களில் 74.92 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

            தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 48.57 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 9.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

            701 மதிப்பெண்களுடன் நளின் கந்தல்வால் எனும் மாணவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

            நீட் தேர்வில் முதல் 20 மாணவிகளுக்கான பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி 10வது இடமும், தேசிய அளவில் 57ஆவது இடத்தையும் பெற்றார்.

 

            நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண் எடுத்து 5ம் இடத்தை பிடித்தார்.

இது தொடர்பான செய்திகள் :