நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவதாக மானியக் குழு தெரிவித்துள்ளது

Home

shadow

                        நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைகழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பல்கலைக்கழக மானியக்குழு போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு  போலீசில் புகார் அளித்துள்ளது. நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.ட் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8 பல்கலைகழகமும், டெல்லியில் 7 பல்கலைகழகமும், மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2 பல்கலைகழகமும், பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைகழகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :