நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு குண்டுவெடிப்பு கூட நிகழவில்லை - பிரதமர் நரேந்திர மோடி

Home

shadow

               மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு குண்டுவெடிப்பு கூட நிகழவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம், அம்ரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனவும்  கடந்த காலங்களில், புணே, ஆமதாபாத், ஹைதராபாத், காசி, ஜம்மு ஆகிய இடங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன என தெரிவித்தார்.  ஆனால் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கேனும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என கேள்வி எழுப்பிய அவர்  மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு குண்டுவெடிப்பு கூட நிகழவில்லை என பெருமித்துடன் தெரிவித்தார். மேலும் காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 75 சதவீத  வாக்குகள் பதிவானது எனவும் அந்த வாக்குப்பதிவின்போது ஒரு வன்முறைச் சம்பவம் கூட நிகழவில்லை என தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் மிகவும் குறைவான இடங்களில் காங்கிரஸ் கட்சி தற்போதுதான் போட்டியிடுகிறது எனவும்  இதை மறந்துவிட்டு, நாட்டை மீண்டும் ஆளலாம் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :