நாட்டின் ஜனநாயக அமைப்பு அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சி தவறாகப் பயன்படுத்தி வருகிறது - சீதாராம் யெச்சூரி

Home

shadow

                                காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியுடன்  போட்டியிட விரும்புகிறாரா அல்லது இடதுசாரிகளுடன் போட்டியிட விரும்புகிறாரா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.


கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, பாரதிய ஜனதா கட்சிக்கு  எதிர்ப்பதற்காக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் கர்நாடகத்திலேயே போட்டியிட்டனர். ஆனால், ராகுல் காந்தி கேரளத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார் எனவும் தற்போது ராகுல் காந்தி   இடதுசாரிகளுடன் போட்டியிட விரும்புகிறாரா அல்லது பாரதிய ஜனதாவுடன் போட்டியிட விரும்புகிறாரா என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும். என தெரிவித்தார். மேலும் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது என தெரிவித்த அவர்  ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த பாரதிய ஜனதா கட்சி  நாட்டை ஹிந்து நாடாக மாற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டின் ஜனநாயக அமைப்பு அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சி தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும்  இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :