"நாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குவதாக
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்..
மகாராஷ்டிர மாநிலம், வார்தா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி
மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்
. அப்போது பேசிய அவர், நமது நாட்டின் சமூகப்
பொருளாதாரப் பிரச்னைகள் அனைத்தும் சிக்கலானவை என்றும் , அவை ஒன்றுடன் மற்றொன்று பிணைந்து காணப்படுவதாகவும்
தெரிவித்தார். உலக மக்கள்தொகையில் 18 சதவீதம்
பேர் இந்தியாவில் உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு
சுகாதாரம் பெரும் சவாலாக உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் சவாலை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை மத்திய
அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர்,
அவற்றுள் "ஆயுஷ்மான் பாரத்' மிகவும் முக்கியமான திட்டம் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பால்
பலர் தங்களது உறவினர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளதாகவும், அவர்களுக்கு தனது வருத்தத்தைத்
தெரிவித்துக் கொள்வதாகவும் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார். முன்னதாக,
சேவா கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகாத்மா காந்தி தங்கியிருந்த பாபு குடிலை
குடியரசுத் தலைவர் நேரில் பார்வையிட்டார்.